அடடே…. நாட்டிலேயே மிகப்பெரிய சினிமா ஸ்கிரீனா…. எங்கு இருக்கு தெரியுமா….!!!!

நம் நாட்டிலேயே மிகப்பெரிய சினிமா ஸ்கிரீன் என்றால் ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் திரையரங்கை கூறுகின்றனர்.

சினிமா பார்ப்பது என்றாலே மக்களுக்கு ஒரு தனி அனுபவம். அதிலும் குறிப்பாக இந்த காலத்திற்கு ஏற்றவாறு பிரம்மாண்டமான “ஐ மாக்ஸ்” திரையரங்குகளில் படங்களை பார்ப்பது என்பது சிறப்பான அனுபவமாகும். நம் நாட்டில் மிகக் குறைந்த அளவில்தான் “ஐ மாக்ஸ்” திரையரங்குகள் உள்ளது. நம் நாட்டின் தலைநகரான சென்னையில் கூட இரண்டே இரண்டு “ஐ மாக்ஸ்” திரையரங்குகள் தான் உள்ளது. இதனை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் என்ற திரையரங்கு நாட்டிலேயே மிகப்பெரிய சினிமா ஸ்கிரீன் கொண்ட திரையரங்காக திகழப்போகிறது.

இங்கு தற்போது 64 அடி உயரம், 101.6 அடி அகலம் கொண்ட ஸ்கிரீனை அமைத்து கொண்டிருக்கிறார்கள். இந்த பெரிய ஸ்கிரீனில் திரைப்படங்களை நாளை முதல் பார்க்கலாம் என்று நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள். மேலும் அடுத்த மாதம் வெளியாகவுள்ள “அவதார் 2” திரைப்படத்தை ஒரு பிரம்மாண்டமான திரையில் பார்த்தல் எப்படி இருக்கும் என சினிமா ரசிகர்கள் கருதுகிறார்கள்.  எனவே ஹைதராபாத் சினிமா ரசிகர்களுக்கு இந்த பிரம்மாண்ட திரை இனிய சினிமா அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply