அடடே!.. கிடா படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த அந்தஸ்து….. என்னனு நீங்களே பாருங்க….!!!!!

இயக்குனர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள “கிடா” திரைப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனரான ரா. வெங்கட் இயக்கத்தில் உருவான படம் தான் “கிடா”. இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ ஸ்ரவந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர் மற்றும் கிருஷ்ணா சைதன்யா தயாரித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் பூ ராமு, மாஸ்டர் தீபன், காளி வெங்கட், கமலி, லோகி மற்றும் பாண்டியம்மா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மதுரைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு சிறுவனுக்கும் அவனது தாத்தா மற்றும் ஒரு ஆட்டுக்குட்டிக்குமிடையே உள்ள உறவை சொல்லும் வகையில் இந்த கதை அமைந்துள்ளது.

இதனை அடுத்து இந்த திரைப்படத்தை கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தை திரையில் போடும்போது மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். இந்த திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் 22 வரை நடக்கவுள்ளது. மேலும் இந்த படம் சென்னையில் நடைபெறவுள்ள 20-வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.