அட அப்ப பாத்த மாதிரியே இப்பையும் இருக்காங்க…. “கில்லி” பட அம்மாவை புகழும் ரசிகர்கள்…!!

கில்லி பட அம்மா அன்று பார்த்தது போலவே இன்றும் இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படம் கில்லி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை திரிஷா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் நடிப்பு பலரையும் வியக்க வைத்தது. இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்த நடிகை ஜானகியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதில் நடிகை ஜானகி அவரது கணவர் மற்றும் மகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் கில்லி பட அம்மா அன்று பார்த்தது போலவே இன்றும் இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் நடிகை ஜானகி ஜீன்ஸ், சிங்கம், பில்லா-2 உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.