நடிகை வரலட்சுமி தனது கையில் முகமூடியை பச்சை குத்தியதற்காக விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் தாரை தப்பட்டை படத்தின் மூலம் அறிமுகமான நடிகை வரலட்சுமி திரைத்துறையில் தற்போது பிரபலமாகியுள்ளார். இவர் விஜயின் சர்க்கார், தனுஷின் மாரி2 படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்துள்ள வெல்வெட் நகரம், கன்னி ராசி, நீயா 2, டேனி போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதை தொடர்ந்து ராஜபார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்ற இவர் தனது கையில் முகமூடியை பச்சை குத்தியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில் ‘சினிமா மீதான எனது காதலுக்கும், எல்லா பெண்களுக்கும் ஆதரவாக தான் இந்த பச்சை. நாம் அனைவரும் முகமூடியை அணிந்துள்ளோம். நம் வாழ்க்கை மற்றவர்களுக்காக பொய்கள் நிறைந்ததாக இருக்கிறது. எந்த முகமூடியும் இல்லாமல், நமக்கான அமைதியான வாழ்க்கையை வாழ்வோம். நம்மை நாமே நேசிக்க கற்றுக்கொள்வோம்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கூறியுள்ளார்.