நடிகை தமன்னா தெலுங்கு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
நடிகை சமந்தா சமீபத்தில் வெளியான புஷ்பா என்ற தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றிருந்தார். இப்பாடல் செம ஹிட்டானது. தற்போதுவரை, இந்த பாடலுக்கு மவுசு குறையவில்லை.
இந்நிலையில் அவரை தொடர்ந்து நடிகை தமன்னாவும் தெலுங்கு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். அவர் குத்தாட்டம் போட்ட வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.