இயக்குனர் ரோகின் வெங்கடேசனின் அடுத்த படத்தில் நடிகை தமன்னா..!!!

ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான படம்  ‘அதே கண்கள்’. வசூல் ரீதியாக  பலத்த   வரவேற்பை பெற்ற இப்படத்தினை, சி.வி.குமார் தயாரித்தார். இந்நிலையில் இயக்குனர் ரோகின் வெங்கடேசன் தனது அடுத்த படத்திற்கான கதைக்கு  பொறுமை காத்து தற்போது  திகில் மற்றும் காமெடி நிறைந்த படத்தை உருவாக்கினார். இது குறித்து அவர் தெரிவித்த போது

தமன்னா க்கான பட முடிவு

இப்படத்தில் நடிக்க பிரபல நடிகை தமன்னா சம்மதம் கூறியுள்ளார். மேலும் இதை பற்றி அவர் கூறுகையில் இப்படத்தில் இவர் யாருக்கும் ஜோடியாக நடிக்க வில்லை தனித்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து இவருடன் நடிப்பவர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து  வருகிறது. இதை தவிர்த்து தமன்னா விஷாலுடன் சுந்தர் சி இயக்கத்தில் மற்றொரு  படத்தில் நடித்து வருகிறார்.