நடிகை ஸ்ரேயா மழையில் நனைந்தபடி ஆட்டம் போடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
நடிகை ஸ்ரேயா சரண் ”எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதையடுத்து ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் சிம்பு என முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில் தான் ஸ்ரேயா, ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ கோர்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த பின்பும் படங்களில் நடித்து வருகின்றார். அவ்வப்போது அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார். தற்போது வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மழையில் நனைந்து கொண்டு இடுப்பை வளைத்து நெளித்து ஆட்டம் போடுகிறார். இந்த வீடியோவை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
View this post on InstagramJust another rainy day in Barcelona
A post shared by Shriya Saran (@shriya_saran1109) on