தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர் ஆன அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் இயக்கிய படம் “பேபி ஜான்”. இந்த படத்தை இயக்குனர் அட்லி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் சினி 1 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் சிறப்பாக இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் பாடலான “நைன் மடாக்கா” வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் டிரண்டாகி வருகிறது. இந்தப் படம் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு பலரும் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டு வருகின்றனர். அதேபோன்று நடிகை தமன்னாவும், வாமிகா கபியும் இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது. இவர்களது நடன வீடியோவுக்கு நடிகை சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் லைக் செய்து அதற்கு ஏற்ற ரியாக்ஷன்ஸ் கொடுத்துள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த வீடியோவுக்கு “இந்த ஜோடி எனக்கு பிடித்திருக்கிறது” என்று கருத்தும் தெரிவித்துள்ளார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “தெறி” திரைப்படத்தின் இந்தி ரீமேக் தான் “பேபி ஜான்”ஆகும்.
View this post on Instagram