விஜயை திருமணம் செய்ய விரும்பும் நடிகை ரைஸா…!!!!

விஜயை திருமணம் செய்ய விரும்புவதாக ரைஸா வில்சன் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைஸா வில்சன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சகபோட்டியாளர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுதந்தது. மேலும் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் ஆலிஸ் (Alice) என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக காதலிக்க யாருமில்லை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கமல் பிரகாஷ் இயக்குகிறார். வில்லன் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கிறார். மேலும் செந்தில், ஆனந்தராஜ், ராமர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ரைஸா வில்சன்,விஜய் க்கான பட முடிவு

 

இந்நிலையில் தனியார் இணையதள ஊடகம் ஒன்றுக்கு ரைஸா வில்சன் பேட்டியளித்துள்ளார். . அப்போது அவரிடம் தமிழ் சினிமாவில் இருக்கும் இரண்டு ஹீரோவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றால் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என்ற கேள்வி கேட்டபோது. அதற்கு அவர், விஜய் தேவர கொண்டவையும் தளபதி விஜயையும் திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.