“பட வாய்ப்புக்காக கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்”…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் மாமன்னன், சைரன் மற்றும் ரகு தாத்தா போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு தெலுங்கில் நாணியுடன் சேர்ந்து கீர்த்தி நடித்துள்ள தசரா திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் இருந்தே குடும்ப பாங்கான கதை அம்சங்களில் மட்டுமே நடித்து வந்தார். அவர் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தின் நடித்து தேசிய விருதினை வென்றார். இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து நடிகை கீர்த்திக்கு குடும்ப பாங்கான கதை அம்சங்களே வந்தன.

நடிகை கீர்த்தியும் கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்த நிலையில் இளம் நாயகர்கள் கீர்த்தியுடன் சேர்ந்து நடிக்க தயங்குவதாக கூறப்படுகிறது. இதனால் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாம். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஜிகு ஜிகு உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை நடிகை கீர்த்தி பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.