“கணவரை பிரிந்து வாழும் நடிகை திவ்யா”…. மீண்டும் வளைகாப்பு போட்டு அழகுபார்த்த சக நடிகர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் திவ்யா ஸ்ரீதர். இவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில், திவ்யாவுக்கும் அவருடைய கணவர் அர்னவுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றதால் தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட திவ்யா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவனையும் பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் செவ்வந்தி சீரியல் நடிகர், நடிகைகள் நடிகை திவ்யாவுக்கு வளைகாப்பு போட்டு அழகு பார்த்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோன்று மகராசி சீரியல் நடிகர்களும்  திவ்யாவுக்கு அவருடைய வீட்டில் சென்று வளைகாப்பு போட்டிருந்தனர். மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை திவ்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு ,உங்கள் கணவர் மனம் திருந்தி  உங்களோடு சேர்ந்து வாழ வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள்.