பெங்களூர் மாரத்தான் போட்டியில் ஓடுகிறார் நடிகை பிரியாமணி…!!!

 மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு  ஓடுவதாக நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.

 

பெங்களூரில் பிறந்து வளர்ந்த நடிகை பிரியாமணி தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமானவர், இவர் நடிப்பில் வெளியான படம்  பருத்தீவீரன் படம்  ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்து பிரபலமாகி தமிழ் திரைப்பட துறையில் முன்னணி கதாநாயகியாக உள்ள இவர் இரட்டை வேடத்தில் சாருலதா என்ற படத்தில் நடித்துள்ளார்.

பிரியாமணி க்கான பட முடிவு

இவர் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகின்றார் . சமூக சேவையில் ஆர்வம் கொண்ட இவர், பெண்கள் கல்வியை கட்டாயமாக வேண்டும் என்பதை வலியுறுத்தி மே 19_இல்  பெங்களூரில் நடைபெறுகின்ற  மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடுவதாக தெரிவித்துள்ளார்.