ரசிகர்களின் பாராட்டிற்காக காத்திருக்கும் நடிகை பாலக் லால்வானி..!!!

‘குப்பத்து ராஜா’ பட நடிகை பாலக் லால்வானி ரசிகர்களின் பாராட்டிற்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். 

 

இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம்  ‘குப்பத்து ராஜா’. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக பாலக் லால்வானி நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் யோகிபாபு, பூனம் பஜ்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுள்ளது , இப்படத்தில்  நடிகை பாலக் லால்வானி கதாபாத்திரதிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை பாலக் லால்வானி ரசிகர்களின் பாராட்டிற்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Image result for நடிகை பாலக் லால்வானி

 

மேலும் இது குறித்து அவர் கூறுகையில் “இந்த வாய்ப்பை நான் ஒப்புக் கொண்டபோது, உற்சாகம் மட்டுமல்லாது பதட்டம் கலந்த ஒரு உணர்வை உணர்ந்தேன்.மேலும் இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால், அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக பேச வேண்டும். கதாபாத்திரத்தை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக செய்ய வேண்டி இருந்தது என கூறியுள்ள இவர், என் வசனங்களில் மிகவும் பொறுமையாக மற்றும் உதவியாக இருந்த இயக்குனர் பாபா பாஸ்கர் சார், ஜி.வி.பிரகாஷ் மற்றும் பலருக்கும் நன்றி” இவ்வாறு இவர் கூறியுள்ளார். மேலும் என்  நடிப்பை ரசிகர்கள்  பாராட்டும் நாளிற்காக காத்திருக்கிறேன் என்னு கூறியுள்ளார். இப்படம் மே 5_ம்   தேதி திரைக்கு வர இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *