“நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம்” உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

நடிகர் சங்க தேர்தலுக்கு பதிவாளர் விதித்த தடையை இரத்து செய்ய கோரி விஷால் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வெளியாகும் என்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வருகிற 23-ஆம் தேதி  எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து விஷால் தொடர்ந்த வழக்கில் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது.

தொடர்புடைய படம்

இதை தொடர்ந்து திடீர் திருப்பமாக நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு நேற்று தென் சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

Seithi Solai

அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட இதில்  நடிகர் சங்க தேர்தலை நடத்த விடுதிக்கப்பட்ட தடையை இரத்து செய்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டுமென்றும் அந்த மனுத்தாக்களில் தெரிவித்திருந்தார்.நீதிபதி ஆதிகேசலு தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான விஷால் தரப்பு வழக்கறிஞர் பதிவாளருக்கு தேர்தலை இரத்து செய்ய அதிகாரம் இல்லை. சங்கத்தின் பதிவை இரத்து செய்ய மட்டுமே அதிகாரம் உள்ளது. தேர்தல் நடவடிக்கையை தொடங்கிய பிறகு தேர்தலை நிறுத்தும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. 61 பேரும் ஒரே மாதிரியான புகார் அளித்ததில் இருந்து தெரிகின்றது இதில் உள்நோக்கம் இருக்கின்றது என்று தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற க்கான பட முடிவு

பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொதுச்செயலாளர் பதவிக்காலம் முடிவடைந்ததால் இந்த வழக்கை நடிகர் விஷால் தாக்கல் செய்யமுடியாது. இது விசாரணைக்கு உகந்ததல்ல. நடிகர் சங்க தேர்தல் இரத்து செய்ததில் அரசின் தலையீடு இல்லை என தெரிவித்தார். நடிகர் சங்க தேர்தலை நடத்தாமல் இருந்தால் நடிகர் சங்க செலவை தமிழக அரசு ஏற்குமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி வழக்கின் தீர்ப்பை மாலைக்கு ஒத்தி வைத்துள்ளார். பின்னர் தீர்ப்புக்காக கூடிய அமர்வில் நடிகர் சங்க தேர்தலை  நடத்த எந்த தடையும் இல்லை திட்டமிட்டபடி நாளை மறுநாள் தேர்தலை நடத்தலாம் என்று  நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.