மக்கள் மனதில் வாழும் விவேக்…. SIIMA வழங்கிய கடைசி விருது…. உருக்கமாக பதிவிட்ட மகள்….!!

மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தனது கருத்து நிறைந்த காமெடி மூலமாக மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தவர் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக். சமூக சேவகராக பல நன்மைகளை செய்த இவர் அப்துல் கலாமின் மீது பற்றுக்கொண்டு கிரீன் கலாம் என்ற திட்டத்தின் கீழ் முப்பத்தி மூன்று லட்சம் மரங்களை நட்டு சாதனை படைத்தார்.

இத்தகைய நல்ல மனிதர் கடந்த ஏப்ரல் மாதம் உடல்நிலை பாதிப்பு காரணமாக உயிரிழந்தது அவரது ரசிகர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்திற்கான சிறந்த காமெடி நடிகர் விருதை சைமா விவேக் அவர்களுக்கு வழங்கியுள்ளது.

விவேக் சார்பாக நடிகர் யோகிபாபு அந்த விருதை பெற்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளார். விருதை பெற்றுக் கொண்ட விவேக்கின் மகள் தனது ட்விட்டர் பக்கத்தில் தாராள பிரபு திரைப்பட குழுவிற்கு நன்றி தெரிவித்து விவேக் சார்பாக விருதை வாங்கிய யோகிபாபுக்கும் தனது நன்றியை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *