“7 வருடங்களாக நடிகர் விஜய் விக் பயன்படுத்துகிறார்”… பரபரப்பை கிளப்பிய பயில்வான்…. விளாசும் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.‌ இந்நிலையில் நடிகர் விஜய் 7 வருடங்களுக்கும் மேலாக விக் அணிந்து படங்களில் நடித்து வருவதாகவும் பொது நிகழ்ச்சிகளுக்கும் விக் அணிந்து கொண்டே வருவதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகர் விஜயின் தந்தைக்கு வயதானாலும் இன்னும் தலைமுடி உதிர வில்லை. ஆனால் நடிகர் விஜய் கெமிக்கல் ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்தியதால் அவருக்கு முடி உதிர்வு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதே பிரச்சனை கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட போது அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றதால் தலை முடி உதிர்வு பிரச்சினை சரியானது. ரஜினிக்கு முடி உதிரவு பிரச்சனை ஏற்பட்டாலும் அவர் அதைப் பற்றி எல்லாம் கவலை  கொள்ளாமல் எதார்த்தமான நிலையில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆனால் விஜய் மட்டு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் படங்களில் நடிக்கும் போதும் விக் அணிந்து கொண்டே கலந்து கொள்வதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும் இது தளபதி ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பயில்வானை வழக்கம்போல் விளாசி வருகிறார்கள்.