வேலை செய்ய விட மாட்டேன்…!! ஆபாசமாக திட்டிய நடிகர்… கைது செய்த காவல்துறையினர்…!!

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி பகுதியில் சிவமணி நடிகர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் மீது மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. எனவே இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்ய அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் காவல் துறையினரை நடிகர் சிவமணி ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தது பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவமணி மற்றும் அவருக்கு உடந்தையாகயிருந்த திருநாவுக்கரசு, ஸ்ரீதரன், பாக்யராஜ் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *