“யாரும் பேனர் வைக்க வேண்டாம்”… ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்..!

நடிகர் சூர்யா ரசிகர்களிடம் யாரும் பேனர் வைக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23)  பள்ளிக்கரணை அருகே  சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்ததில் நிலை தடுமாறி சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக  உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் நீங்கா அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பலரும் பேனர் வைக்க வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றனர்.

Image result for Actor Surya, banner

இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகர்களிடம் யாரும் பேனர் வைக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, அணைத்து ஊர்களிலும் ரசிகர்கள் பேனர் வைக்க கூடாது. மேலும்  வாழ்க்கையில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் நேர்மையாக இருந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். வேறு ஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் நான் நடித்தால் அது நிச்சயம் வெற்றி பெறும் என்றும், ஒருவரின் வாழ்க்கை பற்றி பேசும் கதையை நான் எப்போதும் தவற விட மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகர் விஜய் ரசிகர்கள் பேனர் வைக்க கூடாது என்று கூறியிருந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யாவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *