பாலாவுடன் ஹாட்ரிக் அடிக்கும் நடிகர் சூர்யா….!!

நடிகர் சூர்யா நந்தா , பிதாமகனை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் பாலாவுடன் இணைய இருக்கின்றார்.

காப்பான் ரிலீஸாக உள்ள நிலையில் சூர்யா  சூரரைப் போற்று படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை முடித்துக் கொடுத்த பின் பாலாவுடன் சேர்ந்து பணியாற்ற உள்ளார். ஏற்கனவே சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இருவரும் நந்தா , பிதாமகன் படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர்.

இதற்கு இடையில் பாலா சூர்யா ஜோடி இணைந்து உருவாகியிருக்கும் புதிய படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஒருவர் வசனம் எழுத இருக்கிறார். அதைப்போல் அந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க கேட்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் படமொன்றிலும் நடிக்க சூர்யாவுடன் பேசி வருகின்றனர்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *