மும்பையில் பல கோடி மதிப்பில் சொகுசு பிளாட் வாங்கிய நடிகர் சூர்யா… விலை எவ்வளவு தெரியுமா…?

சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா அண்மையில் தன்னுடைய மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆனார். மும்பையில் புதிய வீடு ஒன்றினை வாங்கி நடிகர் சூர்யா செட்டில் ஆகியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது ஒரு அப்பார்ட்மெண்டில் சொகுசு பிளாட் ஒன்றினை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஒன்பதாயிரம் சதுர அடியில் அமைந்துள்ள அந்த சொகுசு பிளாட்டை 68 கோடி ரூபாய்க்கு சூர்யா வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சொகுசு பிளாட்டில் ஏதேனும் விசேஷ நிகழ்ச்சிகளை மட்டும் வைத்துக் கொள்வதற்கு சூர்யா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply