தல அஜித்தை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த நடிகர் SK…. டுவிட்டரில் நெகிழ்ச்சி பதிவு…. வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன். நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்க அதிதி சங்கர் ஹீரோயின் ஆக நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அஜித்தை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு அஜித் சாரை பல நாட்களுக்கு பிறகு சந்தித்தேன். வாழ்க்கையில் மறக்க முடியாத சந்திப்பாக அமைந்தது. அவருடைய பாசிட்டிவான வார்த்தைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் அஜித் மற்றும் சிவா இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply