நம்ம வீட்டு பிள்ளையாக வரவிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்…!!!

சிவகார்த்திகேயன் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் “நம்ம வீட்டு பிள்ளை” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் புதிய படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடித்துள்ளார்.மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Image result for sivakarthikeyan

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகின்றது.இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி இத்திரைபடத்திற்கு ”நம்ம வீட்டு பிள்ளை” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *