கொரோனாவோட சீரியஸ் புரியாம நிறைய பேர் இருக்காங்க… வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

நாம் அனைவரும் வீட்டுக்குள்ளேயே  இருந்து கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாப்போம் என்று கூறி நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோவெளியிட்டுள்ளார்.  

இந்தியாவில் தீயாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இதுவரையில் 530 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே திரைத்துறை பிரபலங்கள் பலரும் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மக்களும் அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்றும், வீட்டை விட்டு அவசியமில்லாமல் வர வேண்டாம் என்றும் கூறி விழிப்புணவு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி நடிகர் சிவகாத்திகேயன் ட்விட்டரில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், தன்னுடைய குடும்பத்தை பற்றி யோசிக்காமல், தன்னலமற்று உழைத்து கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் ஸ்டாப்ஸ், சுகாதாரத்துறை அமைச்சர், தூய்மை பணியாளர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறை, பீல்டுல இறங்கி நமக்கு நல்ல தகவல் கொடுக்கனும்னு ஓடிட்டுருக்குற பத்திரிகை ஊடக துறை நண்பர்கள். அத்தியாவசிய பொருட்கள் நமக்கு கிடைக்கும்னு இயங்கி கொண்டிருக்கும் எல்லோருக்கும் நன்றிகள் அண்ட் சல்யூட்.

அவங்க எல்லாருக்கும் மக்கள் பண்ண வேண்டியது ஒன்னே ஒன்னு தான். அவங்க கேட்பதும் ஒன்றே ஒன்றுதான். வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் இருங்க அப்படிங்குறது தான். எமெர்ஜென்சில மட்டும் வெளியே வாங்க . இன்னும் கொரோனாவோட சீரியஸ் புரியாம நிறைய பேர் இருக்காங்க. அவங்கள்ல பத்து 20 பேருக்காவது இந்த வீடியோ போய் சேரனும்னுதான், இந்த வீடியோவை நான் இப்போம் பதிவிட்டு இருக்கேன். அதனால நம்ம எல்லாரும் வீட்டுக்குள்ளே இருப்போம். வீட்டுக்குள்ளேயே இருந்து நம்மளை நம்மளே எப்படி பாதுகாக்கனும் அப்படின்னு நிறைய பேர் சொல்லிட்டாங்க.

வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கனும், இதை செஞ்சா நம்ம அந்த கொரோனாவிலிருந்து நம்மளை பாதுகாக்க முடியும். எல்லாத்தையும் முறியடிக்க முடியும். நான் நம்புறது எப்போதும்  ஒன்னே ஒன்னு தான். உலகின் தலைசிறந்த சொல் செயல். செய்துகாட்டுவோம் நன்றி” என்று கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *