“நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்கவில்லை”காரணம் என்னவாக இருக்கும்….!!

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்க செல்லாமல் வீட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் உற்சாகத்துடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.ஆனால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஓட்டு இல்லை என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் , நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது , இந்த வாக்கு சாவடியில் உள்ள பூத் எண் 303-ல் நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி கிருத்திகாவிற்கு ஓட்டு உள்ளது. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவர் ஒட்டுப்போட செல்லவில்ல்லாமல் வீட்டில் இருக்கின்றார்.