“கிரேஸி மோகன் மறைந்தது பெரும் இழப்பு” நடிகர் சித்தார்த் இரங்கல்..!!

நடிகர் சித்தார்த் கிரேஸி மோகனுக்கு ட்விட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் 

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசன கர்த்தாவுமான கிரேஸி மோகனுக்கு  நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாரடைப்பால் அவதிப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணிக்கு கிரேஸி மோகன் உயிரிழந்தார்.

Image

இந்நிலையில் உயிரிழந்த கிரேஸி மோகனுக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் சித்தார்த் கிரேஸி மோகனுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில், “கிரேஸி மோகன்  மறைந்தது சினிமா, திரையரங்கம் மற்றும் சிரிப்பவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு. அவரை போல வேறு ஒருவர் வர இயலாது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *