“மீள முடியாத பெரும் துயரமாக இருக்கிறது” ரித்தீஷின் இறப்பு குறித்து சீமான் உருக்கம்…!!!

காலமான நடிகர் ரித்தீஷின் குடும்பத்திற்கு நடிகர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

இலங்கையிலுள்ள  கண்டியில் பிறந்தவர் நடிகர் ரித்தீஷ். இவர் சின்னப்புள்ள, நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரித்தீஷ் தற்போது வெளிவந்த LKG படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ரித்தீஷ்  2009_ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.46 வயதான ரித்தீஷ் இன்று அவரது இல்லத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.   இவரின் இழப்பிற்கு திரை பிரபலங்கள் பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரித்தீஷ் க்கான பட முடிவு

இந்நிலையில் நடிகர் ரித்தீஷின் இழப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நடிகர் சீமான் கூறுகையில் இந்த செய்தியை என் தம்பி சுரேஷ் காமாட்சி சொல்லுகையில் என் இதயமே நொறுங்கி போனது இவன் சும்மா விளையாட்டுக்கு சொல்கிறானா என்று நினைக்கையில் நானும் இச்செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்தேன். மீள முடியாத பெரும் துயரமாக இருக்கிறது எப்படி ஆறுதல் தெரிவிப்பது என்று தெரியவில்லை. அவனை இழந்து வாடுகின்ற அவனது குடும்பத்தார்கள் உறவினர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று புரியவில்லை. அதிர்ச்சியான இழப்பை எதிர்கொள்வேன் என்று நான் நினைக்கவில்லை. என்னுடைய அன்புத்தம்பி இழந்து வாடுகின்ற அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.