நடிகர் சங்க தபால் வாக்குப்பதிவை ஒருநாள் நீடிக்க வேண்டும்- பாண்டவர் அணி

நடிகர் சங்க தபால் வாக்குப்பதிவை ஒருநாள் நீடிக்க வேண்டுமென்று பாண்டவர் அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணியும் எதிர்கொள்கின்றது. இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கு நேரில் வர இயலாதவர்களுக்கு தபாலில் வாக்களிக்க  அனுமதி வழங்கப்பட்டு , அவர்களுக்கான தபாலும் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் தபால் வாக்கு பதிவு முழுமையாக கிடைக்கவில்லை என்று பல்வேறு தரப்பினர் பாண்டவர் அணியினர் மீது குற்றம் சாட்டினர்.

பாண்டவர் அணி க்கான பட முடிவு

நடிகர் ரஜினிகாந்த்தும் தபால் வாக்கு காலதாமதமாக வந்ததால் என்னால்  வாக்களிக்க முடியவில்லை  என்று ட்வீட் செய்துள்ளார். இந்நிலையில்  பாண்டவர் அணியை சார்ந்த , செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ரமணா,  பசுபதி ஆகியோர்  தேர்தல் நடத்தும் அதிகாரியான பத்மநாபனை சந்தித்து ,  பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரின் வீட்டுக்கு தபால் வாக்குச்சீட்டு சரிவர சென்றடையவில்லை எனவே தபால் வாக்குப்பதிவை ஒருநாள் நீட்டித்து வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர்.