நடிகர் சங்க தேர்தலே “ஒரு காமெடி தர்பார்” S.V சேகர் விமர்சனம் ….!!

நடிகர் சங்க தேர்தலே ஒரு காமெடி தர்பார் போல நடக்கிறது என்று நடிகர் SV  சேகர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 23_ ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட  அதே நாளில் நடிகர் SV சேகர் அல்வா என்ற நாடகத்தை அதே கல்லூரியில் நடத்த அனுமதி பெற்றிருந்தார். இதனால் நடிகர் சங்க தேர்தலை நடத்த ஏற்பட்ட சிக்கலை தொடர்ந்து மாற்று இடத்தில் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதே போல நடிகர் SV சேகரும் தனது நாடகத்தை தியாகராஜர் அரங்கிற்கு மாற்றினார்.

இது குறித்து தெரிவித்த நடிகர் SV சேகர் கூறுகையில் , நடிகர் சங்க தேர்தலே ஒரு காமெடி தர்பார் போல நடக்கிறது  எனவே என்னுடைய நாடகத்தின் பெயரை மாற்றினேன். அவர்கள் தேர்தல் நடைபெறும் இடத்தை மாற்றினார்கள் எனவே நானும் நாடகம் நடைபெறும் இடத்தை மாற்றினேன் என்று தெரிவித்தார்.