நடிகர் சங்க வழக்குகள் : ஒரே நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை….!!

நடிகர் சங்க அனைத்து வழக்குகளும் ஒரே நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்து நீதிபதி  ஆதிகேசவலு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 23-ஆம் தேதி தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்படமால் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சங்க தேர்தலில் பதிவாகிய வாக்குகளை என்ன தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்து நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டுள்ளார். நடிகர் சங்க வழக்குகளை ஒரே நீதிபதி முன்பு பட்டியலிட்டவும் , ஒரே விவகாரம் தொடர்பாக வெவ்வேறு வழக்குகளில் மாறுபட்ட தீர்ப்பு வருவதை தவிர்க்கவே இந்த மாற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.