நடிகர் ரித்தீஷ் இறந்துவிட்டாரா..?? இல்லையா..?? குழப்பத்தில் மூழ்கியது திரைத்துறை..!!!

மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்த நடிகர் ரித்தீஷ் தீடீரென கண்விழித்ததாகவும், மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.   

இலங்கையிலுள்ள  கண்டியில் பிறந்தவர் ரித்தீஷ், இவர் சின்னப்புள்ள, நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரித்தீஷ் தற்போது வெளிவந்த LKG படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ரித்தீஷ்  2009_ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.46 வயதான ரித்தீஷ் தனது ராமநாதபுரம் வீட்டில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தங்கியிருந்தார். இந்நிலையில் நடிகர் ரித்தீஷீற்கு  வீட்டிலிருக்கும்போது தீடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உடனே இவரை அருகிலுள்ள கோணிக்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே எதிர்பாராத விதமாக ரித்தீஷ்  இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்

Related image

இதையடுத்து நடிகர் சங்கம் சார்பில் நாசர் இரங்கல் தெரிவித்த நிலையில், ரித்தீஷின் உடல் ராமநாதபுரம் அண்ணாநகரில் இருக்கும் அவரது  இல்லத்தில் வைத்திருந்தபோது ரித்தீஸை பார்த்து உறவினர்கள் கதறி அழுததில் தீடீரென ரித்தீஷ் கண்விழித்ததாக உறவினார்கள் கூறியுள்ளனர். மேலும்  மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் நடிகர் ரித்தீஷ் இறந்துவிட்டாரா இல்லைஉயிரோடு இருக்கிறாரா  என்பது பெரும் குழப்பமாக உள்ளது.