“எல்லா பக்கத்திலும் இருந்தும் தடை வருகின்றது ” நடிகர் நாசர் வேதனை..!!

எல்லா பக்கத்திலும் இருந்து எங்களுக்கு தடை வருகின்றது என்று நடிகர் நாசர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் 23_ஆம் தேதி நடிகர் SV சேகர் நாடகம் நடத்துவதால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் உள்ளது.

Actor Nasser க்கான பட முடிவு

இதனையடுத்து பஞ்சபாண்டவர் அணி சார்பில் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த நாசர் , எல்லா பக்கத்திலிருந்தும் தடை வருகிறது. இது ஏன் என்று தெரியவில்லை SV சேகருக்கு நாடகம் நடத்த உரிமை உள்ளது. எங்களுக்கு தேர்தல் நடத்த உரிமை  உள்ளது. நாங்கள் கடந்த முறை கேள்விதான் கேட்டோம். எங்களை தேர்தலை சந்திக்க வைத்தனர். ஒரே நாளில் மற்றொரு அணியை உருவாக்கினார்கள் அதற்கான காரணம் தெரியவில்லை என்று நாசர் தெரிவித்துள்ளார்.