“நடிகர் மைக் மோகன் பெயரில் கள்ள ஓட்டு” நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பு …!!

நடிகர் சங்கத்தேர்தலில் மைக் மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்  3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.  கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியினரின் பதவி காலம் முடிவடைந்ததை நிலையில் 2019-2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் மயிலாப்பூர்ரின் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிலில் ஏராளமான திரை கலைஞர்கள் உற்சாகமுடன் வாக்களித்து வருகின்றனர்.

நடிகர் சங்க தேர்தல்; நடிகர் மைக் மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு

இன்று மாலை 5 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் மைக் மோகன் வந்த போது அவரின் பெயரில் வாக்களிக்க வழங்கப்படும்  வாக்கு செலுத்தப்பட்டு விட்டது என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகர் மைக் மோகன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடிகர் மைக் மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவான நிலையில் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.