‘பிரேக்கிங் நியூஸ்’ சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜெய்.!!

‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகர் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார்.

தமிழில் முக்கிய கதாநாயகர்களில் ஒருவரான ஜெய், ‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற புதிய படத்தில் தற்போது நடித்துவருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பானுஸ்ரீ நடிக்கிறார். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கும் இப்படத்தை திருக்கடல் உதயம் தயாரிக்கிறார்.சமூகத்தின் நலனுக்காக சாதாரண மனிதன் ‘சூப்பர் ஹீரோ’வாக மாறுகிறார்.

இப்படத்தில் வில்லன்களாக ராகுல் தேவ், தேவ் கில், ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் ஜெ. பிரகாஷ், இந்தரஜா, சந்தான பாரதி, மோகன் ராம், பழ கருப்பையா, மானஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

jai

இது குறித்து அண்ட்ரோ பாண்டியன் கூறுகையில், ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஆக்ஷ்ன் படம், மிக பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகிறது. இதில் சண்டை காட்சிகளில் ரோபோட்ரானிக், அனிமேட்ரோனிக் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறோம். விஷுவல் எஃப்க்ட்ஸ்ன் பங்கு அதிகமாக உள்ளது என்பதால் பாதி படத்திற்கு மேல் கிரீன் மற்றும் புளூ மேட்டிலேயே படமாக்கி வருகிறோம், காதல், எமோஷன், சென்டிமெண்டுடன் கலந்த கமர்சியல் படமாக தயாராகிறது .

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *