“நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதி இன்னும் விவாகரத்து வாங்கவில்லை”…. குட் நியூஸ் சொன்ன பயில்வான்…. ரசிகர்கள் நிம்மதி…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த 18 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்து விட்டனர். இருவரும் பிரிவை அறிவித்தாலும் இன்னும் விவாகரத்து பெறவில்லை. இருவருக்கும் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்பதால் விவாகரத்து கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்பட்டது.

ஆனால் சமீபத்தில் விமர்சகர் உமர் சந்து நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து கேட்டு சென்னை சிவில் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளதாக ஒரு டுவிட்டர் பதிவை போட்டிருந்தார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இதுவரை விவாகரத்து கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் எப்படியும் சேர்ந்து வாழ்வார்கள் என்று ரசிகர்கள் நம்பி கொண்டிருப்பதால் பயில்வான் சொன்ன தகவல் அவர்கள் மத்தியில் நிம்மதியை கொடுத்துள்ளது.

Leave a Reply