நான் நடித்த படத்தை காண வாருங்கள்… தமிழிசையை அழைத்த சிரஞ்சீவி.!!

ஆளுநர் தமிழிசையை நடிகர் சிரஞ்சீவி நேரில் சந்தித்து தாம் நடித்த  “சைரா நரசிம்மா ரெட்டி” படத்தை காண அழைப்பு விடுத்துள்ளார். 

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், தெலுங்கு உச்ச நட்சத்திர நடிகருமான சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியிருக்கும்  படம்  “சைரா நரசிம்மா ரெட்டி”. இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அமிதாப் பச்சன், சுதீப், ஜெகதி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேந்தர் ரெட்டி  இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் சமீபத்தில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Image

இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி தெலங்கானா ஆளுநராக சமீபத்தில் பதவியேற்ற தமிழிசை சௌந்தரராஜனை  நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும்  நடிகர் சிரஞ்சீவி சுதந்திர போராட்ட வீரருடைய  உண்மை வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள “சைரா நரசிம்மா ரெட்டி” படத்தை காண ஆளுநர் தமிழிசைக்கு சிரஞ்சீவி  அழைப்பு விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *