நடிகர் சிரஞ்சீவி வீட்டு மாப்பிளையாகும் விஜய் தேவரகொண்டா….!!

 நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகர் சிரஞ்சீவி_யின் தம்பி மகள் நிஹாரிகா_வை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர்   “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம் மூலம் பிரபலமானார் . தமிழில் சமீபத்தில் வெளியான  “நோட்டா” படத்தில் நடித்துள்ளார். இவர்  நடிகர் சிரஞ்சீவி_யின் தம்பி மகள் நடிகை நிஹாரிகா_வை காதலித்து வருவதாகவும் விரைவில் விஜய் தேவரகொண்டா_வுக்கும் , நிஹாரிகா_வுக்கும்  திருமணம் நடக்க உள்ளதாகவும்  தகவல் வெளியாகிள்ளது.

Image result for தேவரகொண்டா நிஹாரிகா

நடிகை நிஹாரிகா தமிழில் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” என்ற திரைப்படத்தில்   நடித்துள்ளார். இவரின் சகோதரர் நடிகர் வருண்தேஜ் . விஜய் தேவரகொண்டாவோ, நிஹாரிகா  காதல் குறித்த தகவலை இவர்கள் இருவரும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை . மேலும்  இருவருக்கும் திருமணம் என்று  வெளியான தகவல் உண்மை இல்லை. யாரும் இதை நம்ப வேண்டாமென்று குடும்பத்தினரும் , நட்பு வட்டாரத்தினரும் தெரிவித்துள்ளனர்.