குடிமகன் பட இயக்குனருக்கு பிரபல நடிகர் பாராட்டு..!!!

குடிமகன் படத்தை பார்த்து விட்டு அப்படத்தின் இயக்குனருக்கு நடிகர் பாக்கியராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். 

பாக்கியராஜ் க்கான பட முடிவு

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘குடிமகன்’ திரைப்படத்திற்கு மூன்று வெற்றி கிடைத்திருக்கிறது. பிரபலங்கள் இல்லாமல் ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்தது முதல் வெற்றி. படம் ரிலீசுக்குப் பிறகு தியேட்டர்கள் அதிகரித்திருப்பது இரண்டாவது வெற்றி. மேலும் பெண்கள், தாய்குலங்களை கவர்ந்திருப்பது மூன்றாவது வெற்றி. குடிப்பழக்கத்தில் மூழ்கியவருக்கு என்னென்ன சிக்கல் ஏற்படும் என்பதை குடும்பத்தை வைத்து எடுத்துள்ளார். இவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பாக்கியராஜ் வாழ்த்தியுள்ளார்.