நடிகர் அசோக் செல்வனுக்கு பிரபல தயாரிப்பாளர் மகளுடன் விரைவில் டும் டும் டும்?…. குவியும் வாழ்த்து..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அசோக் செல்வன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான சூது கவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிப்பில் கடந்த வருடம் மட்டும் நித்தம் ஒரு வானம், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம் போன்ற படங்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது நடிகர் அசோக் செல்வன் பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகளை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரது காதலையும் பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply