கணவன் மனைவி_யுடன் களமிறங்கும் காப்பான்….!!

காப்பான் படத்தில் நடிகர் ஆர்யாவும் , அவருடைய  மனைவி சாயிஷாவும் இணைந்து நடித்துள்ளனர்.

 

தயாரிப்பாளர் செல்வராகவன் இயக்கத்தில்  நடிகர் சூர்யாவின் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து சூர்யா அடுத்து நடித்து வரும் படம் காப்பான்.இதை கேவி ஆனந்த் இயக்கி வருகிறார்.  இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன . இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஆர்யாவும் அவருடைய அன்பு மனைவி சாயிஷா க்கான பட முடிவு

இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதில் இவர் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.மேலும் இதில் நடிகர் ஆர்யாவும் அவருடைய அன்பு  மனைவி சாயிஷாவும் நடித்து இருக்கிறார்கள்.நடிகர் ஆர்யாவுக்கும்  சாயிஷாவுக்கும் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமணம் காதல் திருமணமாகும். கணவன் மனைவி இந்த படத்தில் நடித்துள்ளதால் இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.