சூப்பர் ஹிட் ஆன எந்திரன் படத்தின் கதையை நிராகரித்த தல அஜித்?…. எதற்காக தெரியுமா…? வெளியான காரணம்…!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றாலே அது சங்கர்தான். இயக்குனர் சங்கரின் ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டம் இருக்கும். இந்நிலையில் இயக்குனர் சங்கரின் 4 படங்களை நடிகர் அஜித் நிராகரித்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது எந்திரன் படத்தின் கதையை அஜித் எதற்காக என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் சங்கரின் ஜீன்ஸ், சிவாஜி, எந்திரன், முதல்வன் ஆகிய 4 படங்களின் கதையை அஜித் நிராகரித்துள்ளார்.\

இந்நிலையில் எந்திரன் படத்தின் கதையை இயக்குனர் சங்கர் அஜித்திடம் சொன்னபோது தனக்கு பிரம்மாண்டம் எல்லாம் செட்டாகாது. ஒரு சாமானியனாக நடித்துவிட்டு போனால் அதுவே போதும். நான் அப்படித்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு பிரம்மாண்டம் செட் ஆகாது என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் சங்கரின் 4 படங்களை அஜித் நிராகரித்ததாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply