நடிகர் அஜித் , ரஜினி வாக்களித்தனர்…… ரசிகர்கள் ஆரவாரம்….!!

நடிகர் அஜித் , அவரின் மனைவி , நடிகர் ரஜினிகாந்த் தங்களுக்கான வாக்கினை செலுத்தினர்.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.

தொடர்புடைய படம்

இந்நிலையில் இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி வந்து மக்களோடு மக்களாக வாக்களித்தார். அதே போல சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை செலுத்தினார். இதில் ரஜினி மற்றும் அஜித்தை ரசிகர்கள் பார்த்ததால் வாக்குசாவடியில் ஒரு ஆரவாரம் ஏற்பட்டது.