“அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நிறைவு” உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள நடவடிக்கை..!!

சென்னையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள  தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம்  நிறைவு பெற்றுள்ளது. அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற, இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் ஏற்பட்ட படு தோல்வி, உட்க்கட்சி பிரச்சனை, கட்சியின் ஒற்றை தலைமை மற்றும் பொது குழுவை கூட்டுவது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று   முன்னதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஒன்றரை மணி நேரமாக நடைபெற்ற இக்கூட்டத்தில், வருகின்ற உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒற்றை தலைமை சர்ச்சை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.