இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… பிரபல பாலிவுட் நடிகை போலிஸில் புகார்…!!!

பிரபல பாலிவுட் நடிகை சமூக வலைத்தளத்தில் தன்னை அவதூறாக பேசும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுவரா பாஸ்கர். இவர் தனுஷுடன் இணைந்து ராஞ்சனா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வந்த அவர் சில சர்ச்சைகளுக்கும் உள்ளானார்.

ஏனென்றால் இவர் படங்களில் கவர்ச்சியாகவும் நடித்து வந்தார். இதனால் அவரை பலரும் கண்டித்து வந்தனர். இதைத்தொடர்ந்து சுவரா பாஸ்கர் தனக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் வருவதாகவும் புகார் அளித்திருந்தார். மேலும் போதைப் பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் குறித்தும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை சுவரா பாஸ்கர் டெல்லியிலுள்ள வசந்த் கஞ்ச் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில்,”நான் படத்தில் நடித்த காட்சி ஒன்றினை வைத்து ட்விட்டரிலும், யூடியூபிலும் என்னை இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். மேலும் தவறான கருத்துக்களையும் பரப்புகின்றனர். ஆகையால் இதுபோன்று செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்”. போலீசாரும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *