பாலியல் சம்பவ குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் …. கோவை S.P கருத்து…!!

பாலியல் குற்றத்தில் ஈடுபடடவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று  கோவை  காவல்  கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் ஒரு கும்பல் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி பழகி பாலியல் தொந்தரவு செய்து ஆபாசமாக வீடியோ எடுத்தது சமூக வலைதளத்த்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இதில் ஆளும் அதிமுக அரசியல் பின்புலம் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த பாலியல் சம்பவத்துக்கு தமிழகம் முழுவதும் ஒருசேர கண்டனம் எழுந்துள்ளது . இந்நிலையில் நேற்று கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார் .

அப்போது அவர் பேசுகையில் , சபரீஷ் , சதீஷ் , வசந்தகுமார் ஆகியோர் கடந்த 22_ஆம் தேதியும்  முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு 5_ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் . மேலும் இந்த வழக்கில் புகார்தாரரின் சகோதரரை மிரட்டியது தொடர்பாக பெறப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேரான  செந்தில் ,வசந்தகுமார் , நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

Image result for பொள்ளாச்சி பாலியல் சம்பவ

குற்றவாளிகள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் வேறு நபர்களுக்கோ  அல்லது அரசியல் தொடர்போ ஏதுமில்லை . இது சம்பந்தமாக தவறாக செய்திகள் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . இதில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் , இன்னும் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் உள்நோக்கத்தோடு  பரப்பப்படுகிறது , இது தவறான செய்தி . புகார்தாரரின் சகோதரரை மிரட்டியுள்ள .வழக்கில் கைது செய்யப்பட்ட நாகராஜ் அம்மா பேரவை செயலாளராக இருந்து உள்ளார் .

கைது செய்யப்படட சபரீஷ் மற்றும் திருநாவுக்கரசரிடம் இருந்து 4 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது. அதில் இருந்த வீடியோ 4 தான் . நூற்றுக்கணக்கான வீடியோ இருந்தது என்பது தவறான செய்தி அதற்கு ஆதாரம் இருந்தால் தாராளமாக கொடுக்கலாம் . குற்றவாளிகள் மீது 392 , 354A , 354B  ,IPC 66E  மற்றும் women harassment என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . இதில் 100% அரசியல் கிடையாது . இதில் நாலு பேருக்கு தவிர யாருக்கும் தொடர்பும் கிடையாது . குற்றவாளிகள் 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் குற்றவாளிகள்  மீது குண்டர் சட்டம் பதியப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.