“240 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று” கரையை கடந்த ஃபானி..!!

ஒடிசாவில் 240 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசி வந்த நிலையில்  ஃபானி புயல் கரையை கடந்தது என  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. இதற்க்கு ஃபானி என்று  பெயரிடப்பட்டது. இந்த ஃபானி  புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசையை  நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்றது.

இந்த புயல் கோபால்பூர்-சந்த்பாலிக்கு இடையே கரையை கடக்கும் போது,  மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், இந்த புயல் காலை 8மணி முதல் 11மணி வரை கரையை கடக்கும் என்றும்  ஒடிசா வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் பானி புயல்  மணிக்கு 240 – 245 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று  வீசி கரையை கடந்தது. மேலும்  இந்த புயல் மேற்கு வங்கத்தை நோக்கி செல்கிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த அசுர புயல் வீசி வருவதால் ஒடிசாவின் தலைமை செயலாளர், அனைத்து துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்.

Image result for ஒடிசாவில்

சாகிகோபால் பகுதியில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தததால்  ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒடிசாவில் ஃ ஒடிசா கடற்கரையோரங்களில்  சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்குகிறது. ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு அசுர வேகத்தில் காற்று வீசி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஃபானி புயல் பாதிப்புகளுக்கு உதவிகள் பெற 1938 என்ற உள்துறை அமைச்சகத்தின் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். சென்னையில் இருந்து இந்திய கடலோர காவல் படையின் 2 கப்பல்கள் மீட்பு பணிகளுக்காக ஒடிசா விரைந்துள்ளன.