“விபத்தில் உயிரிழந்த தொழிலாளி” மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. போக்குவரத்து பாதிப்பு….!!!

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிர் இழந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இதில் சாக்கு தைக்கும் தொழிலாளியான இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் குமார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விபத்தில் பலியான குமாரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு அரசு தரப்பில் உதவி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும் காவல்துறையினர் உறுதியளித்தனர். அதன் பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இச்சம்பவத்தால் சாலையில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *