“கோர விபத்து” நடந்து சென்றவரை தூக்கி வீசிய கார்…… தூத்துக்குடி அருகே சோகம்….!!

தூத்துக்குடி அருகே  சாலையைக் கடக்க முயன்ற நபர் காரால் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி விடும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் ராமகிருஷ்ணன். இவர் நேற்று சாலைபுதூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்றுள்ளார். அப்போது மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று இவர் மீது எதிர்பாராதவிதமாக மோதி சாலை தடுப்பு சுவரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காரில் பயணித்த ஓட்டுநர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 4 பேர் இதில் படுகாயமடைந்தனர். பின் இதுகுறித்து தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் படுகாயம் அடைந்தவர்களை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துவிட்டு ராமகிருஷ்ணனின் உடலை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.