கணவருடன் சென்ற பெண்…. வரும் வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கூழையார் கிராமத்தில் மீனவர் முத்து வசித்து வருகின்றார். இவரும் அவரது மனைவி முத்துலட்சுமியும் வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது பெருமாள் கோவில் அருகே வந்து கொண்டிருக்கும் போது சாலையோரம் மழையின் காரணமாக மின் கம்பி அறுந்து கிடந்தது.

அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னாடி அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த லட்சுமியின் கழுத்தில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து தனது மனைவியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *