வேகமாக வந்த கார்…. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை…. வேலூரில் நடந்த சோகம்….!!!

கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள ரங்காபுரத்தில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அந்த பெண்ணை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *