மெக்சிகோவில் பயங்கரம்… பேருந்தில் மோதிய டேங்கர் லாரி… கோர விபத்தில் 18 பேர் உயிரிழப்பு…!!!

மெக்சிகோ நாட்டில் பேருந்தின் மீது டேங்கர் லாரி மோதி தீ விபத்து உண்டானதில் 18 நபர்கள் பலியாகியுள்ளனர்.

மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் ஹிடால்கோ நகரத்திலிருந்து ஒரு பேருந்து மான்டேரியை நோக்கி சென்றது. அந்த சமயத்தில், நெடுஞ்சாலையில் எரிபொருள் எடுத்து சென்ற டேங்கர் லாரி அந்த பேருந்தின் மீது மோதியதில், தீ பற்றி எரிந்தது. டேங்கர் லாரியும், பேருந்தும் மொத்தமாக  எரிந்து கருகி நாசமானது.

இது பற்றி தகவலறிந்த தீயணைப்பு படையினர், அங்கு தீயை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இந்த கொடூர விபத்தில் பேருந்தில் இருந்த 18 பயணிகள் பரிதாபமாக பலியாகினர். எனினும், அதிர்ஷ்டவசமாக அந்த டேங்கர் லாரியின் ஓட்டுனர் உயிர் பிழைத்திருக்கிறார்.

இந்த விபத்து தொடர்பில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அச்சம் ஏற்பட்டிருக்கிறது.